• waytochurch.com logo
Song # 29435

அன்பு அன்பு தேவனின் அன்பு

Anbu Anbu Thaevanin Anbu



மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்பு.
இஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்பு.
இரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்பு.
செங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்பு.
மாராவின் கசப்பை மாற்றியே தருவார்.
வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்
தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்
தன்னிகரே இல்லா
தெவிட்டாத அன்பு.

அன்பு அன்பு தேவனின் அன்பு.
எங்கும் நிறைந்திடும் உன்னத அன்பு.
அன்பு அன்பு தேவனின் அன்பு.
என்றும் நடத்திடும் நேசரின் அன்பு.

2. இருவிழிகள் காணும் காட்சிகள் அன்பு.
காணாததிலுமே தேவனின் அன்பு.
இருசிறகில் பட்டாம்பூச்சிக்கும் அன்பு.
சோலையில் மரங்கள் பறவைக்கும் அன்பு.
தேவைகள் நிறைந்த உயிர்களினுள்ளும்
தேவனின் நிறைவை உணர்வதும் அன்பு.
தேவைகள் அறிந்து இரங்கும் குணமே,
இறைவன் தான் வாழ்ந்திடும் உள்ளத்தின் அன்பு.
- அன்பு அன்பு தேவனின் அன்பு...

3. தாழ்மையின் உருவாய் வந்தாரே இயேசு.
ஏழ்மையின் சுமையை சுமந்தாரே, அன்பு.
நிந்தைகள் பலவும் அடைந்தாரே தேவன்.
மனதார பொறுமை காத்தாரே, அன்பு.
சிலுவை சுமந்து தடுமாறி விழுந்து,
உனக்காய் ஜீவனை கொடுத்தாரே, அன்பு.
மானிடா, உந்தன் வாழ்க்கையில் என்றும்,
ஒவ்வொரு நொடியுமே தேவனின் அன்பு.
-அன்பு அன்பு தேவனின் அன்பு...


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com