என் தாயும் நீயே
EN THAAYUM NEEYE
அளவில்லா அன்பை பொழிபவரே
என் தாகம் நீயே என் ஏக்கம் நீயே
வற்றாத நீருற்றை தருபவரே
வாதையிலும் போகும் பாதையிலும்
என்னை காத்து நடத்தின தேவன் நீயே
தனிமையிலும் எந்தன் நெருக்கத்திலும்
துணையாக நின்ற தெய்வம் நீயே
அளவில்லா அன்பை பொழிபவரே
என் தாகம் நீயே என் ஏக்கம் நீயே
வற்றாத நீருற்றை தருபவரே
நீர் இல்லாமல் - என்னால் வாழ முடியாதய்யா
உம் அன்பில்லாமல் - என்னால் நிலைக்க முடியாதய்யா
என் எண்ணங்களிலே நீர் கலந்து விட்டீர்
என் இதயத்திலே என்றும் வாழ்ந்திடுவீர்
என் எண்ணங்களிலே நீர் கலந்து விட்டீர்
என் இதயத்திலே என்றும் வாழ்ந்திடுவீர்
வாதையிலும் போகும் பாதையிலும்
என்னை காத்து நடத்தின தேவன் நீயே
தனிமையிலும் எந்தன் நெருக்கத்திலும்
துணையாக நின்ற தெய்வம் நீயே
உம் கிருபையை - என்றும் அளக்க முடியாதய்யா
உம் கருணையை - என்னால் இழக்க முடியாதய்யா
என் உள்ளத்திலே அமைதி பெருக செய்தீர்
என் வாழ்வினை என்றும் செழிக்க செய்தீர்
என் உள்ளத்திலே அமைதி பெருக செய்தீர்
என் வாழ்வினை என்றும் செழிக்க செய்தீர்
வாதையிலும் போகும் பாதையிலும்
என்னை காத்து நடத்தின தேவன் நீயே
தனிமையிலும் எந்தன் நெருக்கத்திலும்
துணையாக நின்ற தெய்வம் நீயே
அளவில்லா அன்பை பொழிபவரே
என் தாகம் நீயே என் ஏக்கம் நீயே
வற்றாத நீருற்றை தருபவரே
Inspired by Deevinchave Samrudiga Telugu Worship Song no: 27552