தஞ்சமென இயேசுவை நீ நம்பி வரும்போது
THANJAM ENA
பல்லவி
தஞ்சமென இயேசுவை நீ நம்பி வரும்போது
தயவாய் தாங்கி தாய் போல தேற்றிடுவாரே
குணமடையா குணத்திற்கும் குற்றம் சாட்டும் மனதிற்கும்
குருசினில் குருதி சிந்தி குணமாக்க மரித்தாரே
அனுபல்லவி
தாய் மனதும் தகப்பன் உள்ளம் கொண்டவரே. . . . . .
தவிக்கும் போது தாங்கி தடவி தாகம் தீர்ப்பவரே. . . . .
ஜீவஅப்பம் ஜீவத்தண்ணீர் நிரந்தரம் என் சுதந்திரமே. .
தூயரே நீர் தூயரே நீர் மட்டும் துதிக்கு பாத்திரரே . .
சரணம் 01
அச்சம் இருக்கையில் உன் அந்நிய காலத்தில்
துர்ச்சன பிரவாகம் உன்னை முழ்கடிக்கையில்
தற்பரன் இயேசுவில் முழுதாய் தஞ்சம் புகுந்திட
தாழ்வில் தரனியில் தயாபரன் தாங்கிடவே
சரணம் 02
ஒடுக்கப்படுவோர்க்கு உண்மையான புகலிடம் நீரே
ஒதுக்கி தள்ளிப்போட்டாலும் ஒண்டியாக விடீரே
நான் இன்று உனக்கு துனை நிற்கிறேன் என்றவரே
கடைசி வரை கரை சேர்க்கும் கரிசனையுள்ளவரே
சரணம் 03
காரிருள் சூழும்போது அருனோதயமான ஒளி நீரே
உருக்குழைந்து உள்ளம் நொருங்கி தூளாய் போயினும்
பரமகுயவன் நீர் எனை திரிகையில் உயிர் கொடுத்து
உதவாதோன் என்றோர் முன் உயர்வாய் நிலை நிறுத்துவீரே