ஒருவிசை கர்த்தாவே
ORU VISAI KARTHAVE
ஒருவிசை கர்த்தாவே
ஒரு விசை இரங்குமே
ஒருவிசை கர்த்தாவே
ஒரு விசை இரங்குமே
இரங்குமே.., இரங்குமே...
ஒருவிசை மாத்திரம் நீர் இரங்குமே
இரங்குமே.., இரங்குமே...
ஒருவிசை மாத்திரம் நீர் இரங்குமே
என் இருதயம் திருக்கும் மகா கேடுமானதே
அதை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர் மாத்திரமே -2
புது சுத்த ஆவி தந்து மாறுருபமாக்கிட -2
ஒருவிசை நீர் இரங்குமே -2 -- ஒருவிசை
நீர் விரும்பாததையே செய்கிறேன் எனை மண்ணியுமே
என் வழிகள் உமக்கு பிரியமானது அல்லவே -2
என் மீறுதல்கள் நீக்கிட
என் வழிகள் செவ்வைப்படுத்திட --2
ஒருவிசை நீர் இரங்குமே -2 -- ஒருவிசை
செல்வந்தனாகி உம்மை மறந்திடாமலும்
தரித்திரனாகி உம்மை மறுதலியாமலும் -2
அனுதினம் மன்னா தந்து
நீர் வரும் வரை வார்த்தையில் நிலைத்திட --2
ஒருவிசை நீர் இரங்குமே -2 -- ஒருவிசை
This Song is Based on Scriptures: Psalms 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.