உம்மை விட்டு விலக முடியுமா
Naan Unnai Vittu Vilaga Mudiyuma
உம்மை விட்டு விலக முடியுமா?
உந்தன் அன்பை விட்டு அகல முடியுமா
உம்மை விட்டு விலக முடியுமா?
உந்தன் அன்பை விட்டு அகல முடியுமா
வாழ்க்கை வெறுமையானாலும் உற்றோர் உதறிப் போனாலும்
வீட்டை வறுமை சூழ்ந்தாலும் கண்ணீர் கடலாய் வடிந்தாலும்
சொத்தும் சுகமும் இன்றிப் போனாலும்
எல்லாம் இழந்தே தனியாய் தவித்தாலும்
சொத்தும் சுகமும் இன்றிப் போனாலும்
எல்லாம் இழந்தே தனியாய் தவித்தாலும்
உலகம் எள்ளி என்னை நகைத்தாலும்
நண்பர் என்னை எதிர்த்தே பகைத்தாலும்
உலகம் எள்ளி என்னை நகைத்தாலும்
நண்பர் என்னை எதிர்த்தே பகைத்தாலும்
உம்மை விட்டு விலக முடியுமா?
உந்தன் அன்பை விட்டு அகல முடியுமா?
உம்மை விட்டு விலக முடியுமா?
உந்தன் அன்பை விட்டு அகல முடியுமா?
துன்பம் துணையாய் நடந்தாலும்
தடைகள் படைபோல் சூழ்ந்தாலும்
துன்பம் துணையாய் நடந்தாலும் தடைகள் படைபோல் சூழ்ந்தாலும்
நாட்கள் இருளால் நகர்ந்தாலும் தேகம் வலியால் நொந்தாலும்
நீங்கதானே என்னை காக்கணும்
மகனாக பாதுகாக்கணும்
உம்மை விட்டு விலக முடியுமா?
உந்தன் அன்பை விட்டு அகல முடியுமா?
அழகிய கனவுகள் இடிந்தே கலைந்தாலும்
வெண்ணாரை போல அலைந்து திரிந்தாலும்
அழகிய கனவுகள் இடிந்தே கலைந்தாலும்
வெண்ணாரை போல அலைந்து திரிந்தாலும்
பாதை எங்கும் முட்கள் நிறைந்தாலும்
நடக்கும் கால்கள் வலித்தே தளர்ந்தாலும்
உம்மை விட்டு விலக முடியுமா?
உந்தன் அன்பை விட்டு அகல முடியுமா?
உம்மை விட்டு விலக முடியுமா?
உந்தன் அன்பை விட்டு அகல முடியுமா?
அன்புள்ள அப்பா இருக்கையில்
உங்க அன்பை விட்டு ஓட முடியுமா?
இரக்கமுள்ள ராஜா இருக்கையில்
உங்க அன்பை மீறி போக முடியுமா?
அன்புள்ள அப்பா இருக்கையில்
உங்க அன்பை விட்டு ஓட முடியுமா?
இரக்கமுள்ள ராஜா இருக்கையில்
உங்க அன்பை மீறி போக முடியுமா?