நான் உயிரோடு இருக்கும்வரை
Naan Uyirodu Irukumvarai
நான் உயிரோடு இருக்கும் வரை
என் கர்த்தரை நான் பாடிடுவேன்
என் உயிர் உள்ள நாட்கள் எல்லாம் என் கர்த்தரையே
புகழ்ந்திடுவேன்-2
நான் பாடுவேன் நான் போற்றுவேன் அவர் துதி சொல்லி மகிழ்வேன் -2
என் தேவனால் கூடாத அதிசயம் ஒன்றுமில்லையே என் தேவனால் நடக்காத அற்புதம் ஒன்றும் இல்லையே -2
அற்புதம் செய்பவரே அதிசயம் செய்பவரே -2
இல்லாதவைகளை இருப்பதைப் போல அழைக்கும் தேவன் வாக்கு மாறா தேவன் -2
வார்த்தையை நிறைவேற்றுவார் அதிசீக்கிரமாய் நிறைவேற்றுவார் -2
கடந்து வந்த பாதை கடினம்
கூட வந்து தாங்கிக் கொண்டார் -2
அழகாக நடத்தி செல்வார்
என்னை ஆச்சரியமாய் நடத்தி செல்வார் (பரலோகம் அழைத்துசெல்வார்)
