• waytochurch.com logo
Song # 29796

மன்னாதி மன்னவரு

Mannathi Mannavaru


மன்னாதி மன்னவரு
மண்ணுலகை காப்பவரு
மனுஷனா பூமியில் வந்து பொறந்தாரே
வேரென்ன இனிமே
வாழ்க்கை சந்தோஷமே

1. வானத்திலே பறக்கும் பறவைய பறக்கவச்சது யாரு
பூமியிலே முளைக்கும் புல்லுக்கு உடுத்துவிட்டது யாரு - 2
அவைகளையே அவர் பார்த்துக் கொள்வாரென்றால்
அவர் சாயலான உன்னை எப்படி மறப்பார் - 2

உனக்காக பிறந்தார் (இயேசு)
இந்த உலகத்திலே
உன் மனதில்
நீ அழைத்தால் வருவார்
உன்னிடமே
சந்தோஷமே நம் வாழ்விலே
கொண்டாட்டமே இந்த புவியிலே

2. வார்த்தையால் வானங்களை படைச்சு வச்சது யாரு
மனுஷன் வாழ பூமியை படைச்சு அழகுபடுத்தினது யாரு - 2
அவைகளையே நமக்காய் படைத்தாரென்றால்
நம் வாழ்வை வசந்தமாக்க எப்படி மறப்பார் - 2

உனக்காக பிறந்தார் (இயேசு)
இந்த உலகத்திலே
உன் மனதில்
நீ அழைத்தால் வருவார் உன்னிடமே
சந்தோஷமே நம் வாழ்விலே
கொண்டாட்டமே இந்த புவியிலே - 2





                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com