அறியாத வழியில்
Ariyaatha Vazhiyil - அறியாத வழியில்
அளவில்லா அன்பினால் அணைத்து
எனக்கு தெரியாத பாதையில் தூக்கி சுமந்த
கைவிடாத எந்தன் தகப்பனே
ஏசுவே எந்தன் மேய்ப்பரே
எந்த வழியிலும் உம்மை தொடருவேன்
ஏசுவே எந்தன் நேசரே எந்த நிலையிலும்
உம் பின்னே செல்வேன்
வார்த்தையில் ஜீவன் உண்டே -புதிதாய்
வார்க்குதே எனக்குள் வந்தே
உம் வார்த்தைகள் என்றும் நிற்குமே -என்னை
மீட்குதே எனக்காய் நின்றே
என்னை அறிந்தவர் நீர்
முன் குறித்தவர் நீர்
முத்திரை மோதிரமாக என்னை வைத்தீர்
ஏசுவே என் மீட்பரே
எந்த மதிலையும் உம்மால் தாண்டுவேன்
ஏசுவே என் பிரியமே
ஜீவ வார்த்தையை விட்டு எங்கே போவேன்
சிதறுண்டு பிரிந்தேன் உம்மையே
சிறைப்பட்டு கண்டதெல்லாம் நிந்தையே
கறைபட்டு கிடந்தேன் இருளிலே
கரம் பிடித்து எடுத்தீர் வெளியிலே
சிறகடித்து பறக்க செய்தீர்
என் அரணுக்கு திரும்ப செய்தீர்
இரட்டிப்பான நன்மையை தந்தீர்
ஏசுவே எந்தன் மேய்ப்பரே
எந்த வழியிலும் உம்மை தொடருவேன்
ஏசுவே என் நேசரே எந்த நிலையிலும்
உம் பின்னே செல்வேன்
ஏசுவே என் மீட்பரே
எந்த மதிலையும் உம்மால் தாண்டுவேன்
ஏசுவே என் பிரியமே
ஜீவ வார்த்தையை விட்டு எங்கே போவேன்
