மாசில்லா நிலவே
Masilla Nilave
பாடல் வரிகள்:
மாசில்லா நிலவே
மாதவமே மலரே
நேசமுடன் பிறந்த
மாமரியின் மகவே
பலநூறு ஆண்டாக கண்தேடும் சுடரே
ஒருபோதும் மறவாது
மனுவான இறையே
என் இயேசு பாலா எனை மீட்கும் தேவா
ஆரிராரிராரோ...
தனிமையிலே தள்ளாடும் தருணங்கள் தவிர்க்க
மாடடையும் குடிலினிலே எனக்காக உதித்தாய்...
போராடும் வாழ்வினிலே
மன அமைதி பகிர
இறைநிலவே அகமதிலே அகலாக ஒளிர்ந்தாய்...
இனி என்னில் குறைவில்லை நீ பிறந்தாய் மகிழ்வேன்....
மனக் காயங்கள் பெரிதில்லை நீயிருப்பாய் மலர்வேன்....
அழகே... அமுதே... வருவாயே வரமாய்...
ஆரிராரிராரோ...
தானென்ற சுயநலமே இல்லாது காட்ட இம்மானுவேலனாய்
இம்மண்ணில் பிறந்தாய்..
ஒடுக்கப்படும் அனைவருக்கும்
புதுவாழ்வு தரவே
கடுங்குளிரில் எளிமையாய் எழிலாக மலர்ந்தாய்...
வழிகாட்டும் விண்மீனே உன்ஒளியில் தொடர்வேன்
பிறர்வாழ பலநன்மை
எந்நாளும் முயல்வேன்...
இறையே.. நிதமே...
நீமட்டும் இதமே...
ஆரிராரிராரோ...
