சகாயம் கிடைக்கச் செய்யும் தயாபரரே
பல்லவி
சகாயம் கிடைக்கச் செய்யும் என் தயாபரரே...
பக்தியுடன் உம்மை நோக்கி ஜெபித்திடுவேன்
ஜலப்பிரவாகமோ எந்த ஆழியின் அலைகளோ
என்னை அனுகாமல் காப்பவர் என் இயேசுவே..
அனுபல்லவி
என் மறைவிடமே என் உறைவிடமே
என்னை எல்லா இக்கட்டிற்கு விலக்கினீரே
இரட்சன்ய பாடல்கள் என்னை சூழ்ந்திட
உம் வல்ல நாமம் உயர்த்தி துதிப்பேன்
சரணம் 01
என் மீறுதல்கள் உம்மிடம் அறிக்கையிடுவேன்
என் பாவத்தின் தோஷத்தை மன்னிப்பவரே
என் அக்கிரமங்கள் மறைக்காமல் உம்மிடத்தில்
அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்..
சரணம் 02
எனக்கு போதிக்கும் சத்திய ஆவியானவரே
நான் நடக்கும் வழியை காட்டிடும் இரட்சகரே
என் மேல் உம் கண்கள் பதிய வைத்தவரே
உமது ஆலோசனைகள் தந்து நடத்துபவரே ..
சரணம் 03
துன்மார்க்கரின் வேதனை நம்மை சூழ்ந்திடாமல்
கர்த்தரை நான் நம்புவதால் கிருபை சூழ்ந்திடுமே
களிகூறுவேன் நீதிமான்களின் தேவனுக்குள்ளே
புகழ்ந்திடுவேன் கர்த்தர் தந்த நாவினாலே
இப்பாடலின் நோக்கம் நம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவே. சங்கீதம் 68:11
ஆண்டவர் வசனம் தந்தார் அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவாசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பன்னு . ஏழு நிமிடங்களில் ஒரு செய்தியை மிகவும் இரத்தின சுருக்கமாக விளக்கக் கூடியவர்கள் விளங்கி கொள்ளாதவர்கள் யாவருக்கும் மிகவும் இலகுவான முறையில் புரிய இசையோடு கூட சமர்ப்பனம் செய்து இருக்கின்றோம் . இதில் எங்கள் அன்றாட ஜுவியத்தின் போராட்டங்களில் தேவன் நமக்குள்ளும் பாராட்டின தயவுகளையும் இணைத்துள்ளோம். உங்கள் வாழ்வு ஆசீர்வதிக்கப்படவும். சபைகூடிவருதலை விட்டுவிடாதிருக்கவும் எங்கள் உளமார்ந்த ஆசீர்வாதம் உண்டாவதாக. இது ஒர் இலவச சுவிஷேச வெளியீடு .நகல் உரிமை இல்லை
அனைத்து நாடுகளுக்கும் கிறிஸ்து, இது இலாபமற்ற செயலாகும் இலவச சுவிசேஷம், அனைத்து மக்களையும் நம்பிக்கையற்றவர்களையும் நோயாளிகளை வழிநடத்த ஊக்குவிக்கிறது, அடக்கம், அமைதி, மகிழ்ச்சி' இயேசுகிறிஸ்துவின் நித்தியஜீவனையும் பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் மறுவாழ்விற்கான நித்தியத்தையும் வழிகாட்டுகிறது.
