விண்ணை விட்டு மண்ணில் வந்த
vinnai vittu mannil vantha
விண்ணை விட்டு மண்ணில் வந்த
எங்கள் தெய்வம் பிறந்தாரையா
எங்கள் பாவம் போக்க வந்த
மண்ணின் மைந்தன் அவர் தானையா!
அவரைப் போல எவருமில்ல நானும் எங்கும் பார்த்ததில்லை - 2
நல்லவரே! நன்மை செய்பவரே! என்றும் உள்ளவரு எங்கள் இயேசையா
நல்லவரே! நன்மை செய்பவரே! என்றும் உள்ளவரு நீங்க தானையா!
1. பூமியில் வந்தாரு! அன்பை விதைச்சாரு!
பகையை சிலுவையினால் கொன்று விட்டாரு
தாழ்மையின் ரூபமாய் தன்னையே தந்தாரு!
எல்லா நாமத்திற்கும் மேலாய் நீன்றாரு!
இருள் நீக்கும் வெளிச்சம் நீரே!
என்னை மாற்ற வந்தவர் நீரே!
(எனக்குள்ள வந்தாரு அற்புதங்கள் செய்தாரு என்னையும் அவரைப்போல் மாற்றி விட்டாரு)
2. நன்மை செய்பவராய் சுற்றி வந்தாரு!
நம்பிடும் யாவருக்கும் நல்லத செஞ்சாரு!
இழந்ததை மீட்டிடவே மனிதனாய் வந்தாரு!
நித்திய வாழ்வுதனை நமக்குத் தாந்தாரு!
குணமாக்கும் மருத்துவர் நீரே!
குறைநீக்கும் மகிமையும் நீரே!
