கர்த்தாவே உம் இரட்சிப்பிற்காய் ’
Karttave um iratcippirkay
கர்த்தாவே உம் இரட்சிப்பிற்காய்
என் தஞ்சமும் கேடகம் நீரே
கர்த்தாவே உம் கிருபைக்காய் காத்திருக்கின்றேன்
என் பெலனும்.. என் திடனும் நீரே
1. அண்டிக் கொண்டேன் இயேசுவே
என் ஆத்தும நேசரே ஜெயபலமாகயிரும்
என் வாழ்வினில் ஜெயபலமாகயிரும்
2. இரட்சிப்பின் தேவனே சகாயம் செய்பவரே
தீவிரமாய் இறங்கும்
எனக்கு தீவிரமாயிரங்கும்
3. காரியம் வாய்க்க செய்யும்,
தடைகளை தகர்த்திடும்,
நன்மையினால் நிரப்பும்,
என் வாழ்வினில் நன்மைகள் தொடர செய்யும்
4. நிந்தைகள் நீங்கும்படி,கடாட்சம் என் மேல் வைத்து, களிகுர்ந்திட செய்திடும் ,இந்நாட்களில்
மகிழ்ச்சியால் திருப்தியாக்கிடும்
5. கரத்தின் அடிகளால் சோர்ந்து போனேனே
மன்னித்து மனம் இறங்கும்
எனக்கு மன்னித்து மனம் இறங்கும்
6. (நான் இனி) ஈராமல் போகும் முன்னே
தேற்றுமே என்னையே,கூப்பிடுதல் கேட்டிடும்
எந்தன் கூப்பிடுதல் கேட்டிடும்
