அருகில் அணைத்து
அருகில் அணைத்து ஆசீர்வதிக்கும்
எந்தன் இயேசப்பா!, உங்க
குரல கேட்க தவிக்கிறேனே,
செல்ல பிள்ளை நான்;
உங்க அன்பு காத்திடுதே நன்றி!,
நான், ஜெபிக்கும் போது
நடத்தும் உங்க கிருபைதான் அப்பா!
அனுதினமும் நடத்திடவே கண்கள்,
மூடி ஜெபிக்கிறேன்
நல்ல ஞானம் பெற்றிடவே வேதம் படிப்பேன்;
ஏழை நானும் உங்க வழியில் நடக்க வேண்டுமே;
உங்க இரக்கம் போல நல்ல இதயம் தாருமே;
உங்க அன்பு காத்திடுதே நன்றி!,
நான், ஜெபிக்கும் போது
நடத்தும் உங்க கிருபைதான் அப்பா!
உங்க கைகள் பெற்று தரும் ஆசி போதுமே!
நல்ல உள்ளம் காக்கும் உங்க அருள் வேண்டுமே!
சின்ன இதயம் என்னில் நீங்க வாழ வேண்டுமே!
உமது சாயல் என்னுள் நானும் தரிக்க வேணுமே!
உங்க அன்பு காத்திடுதே நன்றி!,
நான், ஜெபிக்கும் போது
நடத்தும் உங்க கிருபைதான் அப்பா!
அருகில் அணைத்து ஆசீர்வதிக்கும்
எந்தன் இயேசப்பா!, உங்க
குரல கேட்க தவிக்கிறேனே
செல்ல பிள்ளை நான்;
