அறியாமையில் உள்ள காலங்கள் என்னை அழைத்தவர்
அறியாமையில் உள்ள காலங்கள்
தேவன் கானாதவர் தான்
நாமோ மனந்திரும்பும் போது
தேவன் நம்மில் மனதுருகுவார்- 2
நானோ அவருக்குள் பிழைத்திட
நானோ அவருக்குள் அசைந்திட
நானோ அவருக்குள் நிலைத்திட
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் - 2
அழுக்கான கந்தை நானே
என்னை மாற்றினாரே
சுயநீதியால் நான் தவறியும்
அவர் நீதியால் தாங்கினாரே-2
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்- 2
மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை நான்
பிழைத்ததும் அவர் கிருபை
என்னை கான்பிக்க ஒன்றுமில்லை
இயேசு நாமமே எல்லாம் எனக்கு-2
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் - 2
நாம் கொடுப்பதற்கு ஏதுவில்லை
என் சுவாசமும் ஜீவனும் நீரே
நான் அறியாதிருக்கையில் எனக்காய்
வாழ்விடம் முன்குறித்தீரே- 2
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
