🔥 அதிசயம் காணும் ஜெபம் இன்று அற்புதம் நடக்கும்
நம் சக்திக்கு மிஞ்சின காரியங்கள் நம்மை
நெருக்கும் போது நமக்கு உதவ தேவனால்
மட்டுமே கூடும் விசுவாசத்தோடு
கேட்கும்போது அவர் அதிசயம் செய்வார்
உடனடியாக செய்வார் ஜெபிப்போமா
அதிசயம் செய்வார் இப்போதே செய்வார்
விசுவாச ஜெபம் எங்கள் நல்ல தகப்பனே
கிருபையாய் எங்களை காத்து நடத்துபவரே
உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம்
எங்கள் பாவங்களை மன்னிக்கிறவரே கிருபை
நிறைந்த நல்ல தகப்பனே படிப்பு ஞானம்
பணம் உடல்பலம் உருதுணையாய் நல்ல
மனிதர்கள் என்று எல்லாம் இருந்தும்
எதுவும் உதவ முடியாத நெருக்கடியான ஒரு
சூழ்நிலையில் உம் அற்புத நடத்துதலுக்காய்
வேண்டி நிற்கும் இந்த அருமை
சகோதரனுக்காய் சகோதரிக்காய்
மன்றாடுகிறேன் அவர்களை நெருக்கும்
காரியம் எதுவாக இருந்தாலும்
எப்படிப்பட்டதாக இருந்தாலும் எத்தனை
தீவிரமானதாக இருந்தாலும் அதை சரி செய்வது
உமக்கு லேசான காரியமாயிற்றே ஏசாயா ஆம்
அதிகாரம் ஆம் வசனத்தில் அப்பொழுது
அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு
உத்தரவு கொடுப்பேன் அவர்கள் பேசும்போதே
நான் கேட்பேன் என்றும் சங்கீதம் ஆம்
அதிகாரம் ஆம் வசனத்தில் துன்பம்
நேர்கையில் என்னிடம் விண்ணப்பம்
செய்யுங்கள் நான் உங்களுக்கு உதவுவேன்
என்றும் எங்களுக்கு வாக்களித்திருக்கும்
தகப்பனே இப்போதும் இக்கட்டான நிலையில் உம்
தெய்வீக இடைபடுதலுக்காய் காத்து
நிற்கிறோம் அப்பா எங்களை காண்கிறவரே தம்
உள்ளங்கைகளில் எங்களை வரைந்திருக்கிறவரே
செயல்பட விடாமல் தடுக்கும் பயத்தையும்
பாரத்தையும் பதட்டத்தையும் எங்களை விட்டு
அகற்றி பலத்தையும் அன்பையும் தெளிந்த
புத்தியையும் கொடுங்கப்பா எங்கள் தேவைகளை
அறிந்தவரே நாங்கள் இப்போது எதிர்கொள்ளும்
சூழ்நிலையின் தீவிரத்தை நீர்
அறிந்திருக்கிறீர் உம்மிடம் எங்கள்
நெருக்கடியான நிலையை ஒப்பு கொடுக்கிறோம்
உம்மை நம்பி இருக்கிறோம் எங்களுக்கான
வழியை திறங்கப்பா ஒரு அற்புதம் நடக்க
ஏக்கத்துடன் ஜெபிக்கும் இந்த பிள்ளைகளின்
வாழ்வில் அவர்களுக்கு தேவைப்படும் அதிசயம்
நடக்கட்டும் இப்போதே செய்யுங்கப்பா
உதவியும் தயவும் எங்கிருந்து யாரால்
கிடைக்க வேண்டுமோ உடனே கிடைக்கட்டும் மாற
வேண்டியவை மனிதர்களோ சூழ்நிலைகளோ
மாறட்டும் மத்தேயு ஆம் அதிகாரம் ஆம்
வசனமும் லூக்கா ஆம் அதிகாரம் ஆம்
வசனமும் மனுஷனால் கூடாதது தேவனால் கூடும்
என்று உறுதியோடு கூறுகிறபடி தேவனே
எங்களுக்கு வேண்டிய அதிசயத்தை இப்போதே
செய்யுங்கப்பா எங்களை வழிநடத்தும் உம்
பரிசுத்த ஆவி என்ன செய்ய வேண்டும் என்ன
செய்யக்கூடாது என்பதை இவர்களுக்கு
உணர்த்தட்டும் எங்கள் தவறான செயல்களோ
முடிவுகளோ எங்களை இந்த நிலையில் கொண்டு
வந்திருக்குமானால் அதை மன்னித்து திருத்தி
மீண்டும் செய்யாமல் இருக்கும் ஞானத்தை
கொடுங்கள் இரண்டு நாளாகமம் ஆம் அதிகாரம்
ஆம் வசனம் பலம் உள்ளவனுக்காகிலும்
பலற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு
லேசான காரியம் என்கிறதே நீர் எங்களுக்காக
யுத்தம் செய்கிறவர் எங்கள் துணையானவர்
எங்களுக்காய் வழக்காடுபவர் எங்கள் நோய்களை
சுமந்து தீர்ப்பவர் செல்வம் தருபவர்
வெட்கப்பட்ட இடத்தில் தலை நிமிற வைப்பவர்
நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை
பார்க்கிலும் உம்மை உம்மை நம்புவது மேல்
என்று சங்கீதம் ஆம் அதிகாரம் எட்டாம்
வசனமும் ஏசாயா இரண்டாம் அதிகாரம் ஆம்
வசனமும் தெளிவாய் சொல்லுகிறதே உம்மையே
நம்புகிறோம் நீர் எங்களை தலை நிமிற
செய்வீர் கைவிட மாட்டீர் இப்போதே அதிசயம்
செய்வீர் என்று விசுவாசிக்கிறோம்
விசுவாசத்தோடு எங்களுக்கான அதிசயத்தை
இப்போதே பெற்றுக் கொள்கிறோம் துதி கனம்
மகிமை உமக்கே செலுத்துகிறோம் இயேசு
கிறிஸ்துவின் நாமத்தினால் ஆமென்
தேவனுக்கே மகிமை உங்கள் ஜெப தேவைகள்
குறித்து கீழே கமெண்டில் உங்கள் அன்பு
சகோதரிக்கு தெரியப்படுத்துங்கள் தேவன்
உங்களோடு இருப்பாராக
