• waytochurch.com logo
Song # 30151

உங்க நேசத்தை

unga nesathai


உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன் கர்த்தாவே
உங்க பாசத்தை விவரிக்க முடியாதப்பா - 2

உலகத்தின் மாயையிலே தொலைந்திருந்த பாவியென்னை
உந்தனின் அன்பாலே கண்டெடுத்தீரே - 2
பாவத்தின் பிடியினிலே சிக்கி நான் மரித்திருந்தேன்
உந்தனின் இரத்தத்தினால் மீட்டெடுத்து வாழ செய்தீர் - 2
இயேசப்பா நீங்க பெரியவர்
இயேசப்பா நீங்க மகா பரிசுத்தர் - 2
உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன் கர்த்தாவே
உங்க பாசத்தை விவரிக்க முடியாதப்பா

ஞானிகள் வெட்கப்பட பைத்தியமான என்னையுமே
உந்தனின் இரக்கத்தாலே தெரிந்து கொண்டீரே - 2
பலவீனமான என்னை கிருபையினால் நிதம் நிறைத்து
கனமான பாத்திரமாய் வடிவமைத்தீரே - 2
இயேசப்பா நீங்க நல்லவர்
இயேசப்பா நீங்க சர்வ வல்லவர் - 2
உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன் கர்த்தாவே
உங்க பாசத்தை விவரிக்க முடியாதப்பா

தோற்றுப்போன முயற்சிகளில் திரும்ப எனக்கு வெற்றி தந்தீர்
மறக்கப்பட்ட ஸ்தலங்களிலே நினைவுபடுத்தினீர் - 2
துரத்தப்பட்ட இடங்களுக்கு மீண்டும் என்னை கொண்டு போனீர்
பிடுங்கப்பட்ட ஸ்தானங்களில் நாட்டினீரைய்யா - 2
இயேசப்பா நீங்க அற்புதர்
இயேசப்பா நீங்க அதிசயமானவர் - 2
உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன் கர்த்தாவே
உங்க பாசத்தை விவரிக்க முடியாதப்பா - 2


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com