உம்மைப் பாட நான் வந்தேன்
🎵 Song: உம்மைப் பாட நான் வந்தேன்
ஒருநாளும் உம்மை நானும் மறவேன்
எந்நாளும் உம்மை நான் துதிப்பேன்
வாழ்விலே நீர் செய்த நன்மை நினைத்து
எந்நாளும் உள்ளத்தால் துதிப்பேன்
உம்மைப் பாட நான் வந்தேன் ஐயா ஏசையா
உம்மைத் துதிக்க நான் வந்தேனே ஏசையா
இதயம் கொடுக்க நான் வந்தேன் ஐயா ஏசையா
உம்மைத் துதிக்க நான் வந்தேனே ஏசையா
பாடி நான் போற்றுவேன் என் நாதரை
என் வாழ்வில் நன்மை செய்த நல் மெய்ப்பரே
அழுகையில் ஆறுதலாய் நீர் நின்றீர்
அந்தரத்தில் ஒளியாய் வந்தீர்
நீரே என்னை நடத்தும் தெய்வம்
உம்மைப் போல ஒருவர் யாருமில்லை
நீரே என்னை நேசிக்கும் தெய்வம்
உம்மைப் போல ஒருவரை கண்டதில்லை
உம்மைப் பாட நான் வந்தேன் ஐயா ஏசையா
உம்மைத் துதிக்க நான் வந்தேனே ஏசையா
வாழ்நாள் முழுதும் பாடுவேன் ஐயா ஏசையா
எந்நாளும் உம்மையே துதிப்பேன் ஏசையா
