• waytochurch.com logo
Song # 30211

இஸ்ரவேலின் நாதனாக


இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
மனிதனாய் பூமியில் பிறந்த அன்பின் தெய்வம்
நித்திய ஜீவன் தந்திடும் என் தெய்வம்

அப்பா பிதாவே தெய்வமே
உம் திரு ராஜ்யம் வருகவே
உம் திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறைவேற வேண்டுமே - இஸ்ரவேலின்

செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர்
பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர்
கொடும் வெயிலில் மேக தனலாகி
இருளின் அன்பின் தீபமாய்
சீனாய் மலையின் மேலே நீர்
நீதியின் கட்டளை எடுத்துரைத்தீர்

மனிதனாய் பூமியில் அவதரித்தீர்
எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர்
உடலும் இரத்தமும் திரு விருந்தாய்
இவ்வுலகத்தில் ஜீவனாய்
வழியும் சத்தியமும் ஆனவரே
உம் திருநாமம் வாழ்த்துகிறோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com