மகிழச் செய்வார்
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்,
வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருப்பேன்,
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்,
என் வேண்டுதல் அவர் கேட்டதால் மகிழ்ந்திருப்பேன்.
நீங்கா காயங்கள் ஆறும்,
துக்க இரவுகள் மாறும்,
மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்,
என் வேண்டுதல் அவர் கேட்டதால் மகிழ்ந்திருப்பேன்.
அன்னாளின் துக்கம்
அவர் கேட்கும் வரை,
ஆகாரின் துக்கம்
அவர் காணும் வரை,
தேவன் மகிழ செய்வார்,
தேடி வருவோரை மகிழ செய்வார்.
யோசேப்பின் கண்ணீர்
யோபுவின் கண்ணீர்
தேவன் மகிழ செய்வார்,
வாக்குத்தத்தம் நிறைவேற்றி மகிழ செய்வார்.