• waytochurch.com logo
Song # 30354

இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்


இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
இயேசுவின் பின்னால் ன்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால்
உலகமே பின்னால்
சிலுவையே முன்னால்
உலகமே பின்னால்
இயேசு சிந்திய
இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
இயேசு சிந்திய
இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறிவிட்டேன்
உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறிவிட்டேன்
உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும் ஒப்பு
கொடுத்து விட்டேன்
உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும் ஒப்பு
கொடுத்துவிட்டேன்
நானவர் ஆலயம்
எனக்குள்ளே இயேசு
நான்வர் ஆலயம்
எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும்
எவ்வேளையிலும்
எப்போதும் துதித்திடுவேன்
என்ன நடந்தாலும்
எவ்வேளையிலும்
எப்போதும் துதித்திடுவேன்
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின்
முற்றிலும்
வெற்றிவேந்தன்
என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம்
பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ
வருகின்ற காலமோ
நிகழ்கின்ற காலமோ
வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
திரும்பி பார்க்க மாட்டேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com