https://waytochurch.com/css/WaytoChurchfonts.css Yegova Mephalti யேகோவா மெஃபல்டி
  • waytochurch.com logo
Song # 7201

Yegova Mephalti யேகோவா மெஃபல்டி


யேகோவா மெஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யேகோவா மெஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே

ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே
வலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2
-யேகோவா மெஃபல்டி

1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்
கர்த்தர் விடுவித்தீரே
சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்
கர்த்தர் விடுவித்தீரே

ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2

2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே-2

வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2-யேகோவா மெஃபல்டி




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com