En Jebathai Ketkirar – என் ஜெபத்தை கேட்கிறார்
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) – என் ஜெபத்தை
2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) – என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) – என் ஜெபத்தை
En jebathai Ketkirar
Enakku arulgirar
Kanmalayil ennai vaithu
Paadhugaakkiraar (2)
1. Alaigal enamael purandaalum
Anjidamaattaen (2)
Malaigal en mael vizhundhaalum
Bayappadamaattaen (2) – En jebathai
2. Varanda nilathil naan nadandhu sendraalum (2)
Vazhiyariyaamal thigaithu nindraalum (2)
Varutham dhaagam pasiyum ennai
Nerungavilliayae (2)
Vazhinadathum dhaevankaram
Kurugavillaiyae (2) – En Jebathai
3. Viyaadhi varumaiyaal soarndhuvittaalum
Vaasal kadhavugal ellaam adaithukkondaalum (2)
Ondrumennai kalangavaikka
Mudiyavillaiyae (2)
Karthar kirubai ennai vittu
Vilagavillaiyae (2) – En Jebathai
4. Kadalin alaiyil naan payanam seidhaalum
Kaatrum puyalumaai ennai edhirthu vandhaalum (2)
Edhuvumennai thaduthu nirutha
mudiyavillaiyae (2)
Karthar munnae selvadhaalae
kavalaiyillaiyae (2) – En Jebathai
5. Atthimarangalil ilaiyudhirndhaalum
Dhraatchai chedigalil kani izhandhaalum (2)
Sutri panjam naerndhapoadhum
Kalakkamillaiyae (2)
Karthar karangal ennai thaangum
Varuthamillaiyae (2) – En Jebathai