• waytochurch.com logo
Song # 14729

அறுவடைக்காலம் அவசரமே

Aruvadai Kaalam Avasarame


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to MALAYALAM



அறுவடைக்காலம் அவசரமே

அறுவடை செய்ய விரைந்திடுவீர் - 2

விளைந்த வயல் வெளிகள்

வருந்தி அழைக்கின்றதே - 2 - அறுவடை



1. நெருக்கி ஏவிடுதே

கல்வாரி தூய அன்பே - 2

நொறுக்கப்பட்டார், பிழிப்பட்டார்

எடுத்துரைப்பாயா தேவ அன்பை - 2 - அறுவடை



2. காலங்களோ கடைசி

நாட்களோ இல்லையே - 2

அழிவினின்று தப்பும் வழி

அறிவிப்பார்கள் யாரும் உண்டோ - 2 - அறுவடை



3. பாதாள ஜுவாலையிலே

புழுவாய் துடிக்கின்றாரே - 2

உடன் பிறந்தோர் ஐவருமே

தடுத்திடுவோர் இங்கே யாரும் உண்டோ - 2 - அறுவடை



4. மேய்ப்பனில்லா ஆடுகள்

திகைத்து திரிகின்றதே - 2

வழி சத்தியம் ஜீவனான

கிறிஸ்துவை சொல்ல யாரும் உண்டோ - 2 - அறுவடை




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com