• waytochurch.com logo
Song # 14829

நிம்மதி தேடி

Nimmadhi Thedi


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to BENGALI

நிம்மதி தேடி, நிம்மதி தேடி

அலைந்தேன் உலகினிலே

அலைந்தேன் உலகினிலே - (2)

ஓடினேன் ஓடினேனே...

தேடினேன் தேடினேனே...

நிம்மதியில்லையே, நிம்மதியில்லையே (2) - நிம்மதி தேடி...



1) நிலையில்லா உலகில் நிலைநிற்க செய்பவரே

அலைமோதும் வாழ்வில் அலையாமல் காப்பவரே - (2)

இயேசு ஒருவர் தான்

இயேசு ஒருவர் தான்

இயேசு ஒருவர் தான் - என்

இயேசு ஒருவர் தான் - நிம்மதி தேடி...



2) இருள்சூழ்ந்த வாழ்வில் ஒளியாக இருப்பவரே

அன்பில்லா உலகில் அன்பாக இருப்பவரே - (2)

இயேசு ஒருவர் தான்

இயேசு ஒருவர் தான்

இயேசு ஒருவர் தான் - என்

இயேசு ஒருவர் தான் - நிம்மதி தேடி



3) ஜீவனற்ற வாழ்வில் ஜீவனைத் தருபவரே

வழியின்றி தவிப்பவர்க்கு வழியாக இருப்பவரே - (2)

இயேசு ஒருவர் தான்

இயேசு ஒருவர் தான்

இயேசு ஒருவர் தான் - என்

இயேசு ஒருவர் தான்



நிம்மதி தேடி நிம்மதி தேடி

அலைந்தேன் உலகினிலே

அலைந்தேன் உலகினிலே - (2)

ஓடினேன் ஓடினேனே

தேடினேன் தேடினேனே

நிம்மதியடைந்தேனே, நிம்மதியடைந்தேனே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com