• waytochurch.com logo
Song # 14847

உம்மை நினைக்கும் போதெல்லாம்

Ummai Ninaikkum Pothellam


உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா

பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடிக் கண்டு பிடித்தீர்
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்

பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்
உம் பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்

இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி
கண்ணீர் துடைக்கின்றீர்

உந்தன் துதியைச் சொல்ல
என்னைத் தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்

சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானேன்

உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஓழிந்து போகும்
உம் வார்த்தையோ ஓழியாதையா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com