• waytochurch.com logo
Song # 14869

என்னை யாரென்று எனக்கே இன்று

Ennai yaarendru enakke indru


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

என்னை யாரென்று எனக்கே இன்று

அடையாளம் காட்டினீர்

வெறும் மண் என்று உதிரும் புல்லென்று

எனக்கே நினைவூட்டினீர்



என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு

எல்லாம் தெரியும் என்று நடந்தேன் - ஆனால்

வழியிலே தவறி விழுந்தேன் - நல்ல

வழியையும் தவறி அலைந்தேன் - நான்

தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்



நானாய் நடந்த சில வழிகள் - இன்று

வீணாய் மனதிற்குள்ளே வலிகள் - எந்தன்

சுயத்தினால் கிடைத்த சிறைகள் - எந்தன்

அகத்தினுள் படிந்த கறைகள் - இல்லை

நிறைகள் முற்றிலும் குறைகள்



வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா

உந்தன் வழியில் என்னை நடத்தும் - இன்றே

எந்தன் சுயமதனை அகற்றும் - அன்று

எந்தன் ஜீவியமது சிறக்கும் - புத்தி

பொருத்தும் முற்றிலும் திருத்தும்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com