• waytochurch.com logo
Song # 14997

இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்

Innal Radsippu Kerra


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA

இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்

ஏற்ற நல் நாள் ஏற்ற நல் நாள்



சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து



சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் -தேவ

சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்



வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்

மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே



உலகச் சிநேகம் வெகு கேடு அதற்

குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு



இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்

இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு



இனிமேலாகட்டும் என் றெண்ணாதே -பவ

இச்சைக் குட்பட்டால் திரும்ப ஒண்ணாதே



கிறிஸ் தேசுவை உற்றுப் பாரு - அவர்

கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு



பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்

பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார்



மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய

வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி



ஏசுபெருமானை நீ நம்பு - அவர்

என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com