• waytochurch.com logo
Song # 15083

காலங்கள் கடந்து போனதே

kalangal Kadanthu Ponathae

Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TELUGU

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா

உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)

உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே

பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே - (2)

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே

நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே - (2)

ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே

கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே - (2)

நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்

நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் - (2)

மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே - (2)

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே

மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே - (2)

பாலைவனத்தில் நீரூற்றினீர்

சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் - (2)

தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே

சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே - (2)

சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை

தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை - (2)

தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்

தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் - (2)

எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே

தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே - (2)

கானானின் தேசத்தின் அன்பான தேவனே

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com