• waytochurch.com logo
Song # 15101

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

Kartharai Thedina Naatkal


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to TAMIL

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

காரியம் வாய்க்கச் செய்தாரே

எத்தனை எத்தனை நன்மைகளோ

இயேசப்பா செய்தாரே - நான்



இறுதிவரை என் வாழ்வு

இயேசப்பா உமக்குத்தானே



கால்கள் தள்ளாட விடமாட்டார்

காக்கும் தேவன் உறங்க மாட்டார்

இஸ்ராயேலைக் காக்கிறவர்

எந்நாளும் தூங்க மாட்டார் - இறுதி



கர்த்தர் என்னைக் காக்கின்றார்

எனது நிழலாய் இருக்கின்றார்

பகலினிலும், இரவினிலும்

பாதுகாக்கின்றார்



போகும் போதும் காக்கின்றார்

திரும்பும் போதும் காக்கின்றார்

இப்போதும், எப்போதும்

எந்நாளும் காத்திடுவார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com