• waytochurch.com logo
Song # 15173

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்

Kiristhava Illaramae


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to MALAYALAM

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்

கிருபை செய்வீர், பரனே!

பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்

பண்பாய் நடத்தி வந்த இன்பக்குடும்பம்போல



ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்

திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,

சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்

சுத னேசு தலைமையில் தூய வீடாகவும்



ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்

உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம் போல

நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி

நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக்



அன்போடாத்துமதாகம் அரிய பரோபகாரம்

அருமையாக நிறைந்தே அயலார்க் கொளி விளக்கமாய்த்

துன்பஞ் செய்கிற பல தொத்து வியாதிகளைத்

தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து



மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,

மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று

கலை உடை உணவிலும், கல்வி முயற்சியிலும்

கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com