Manan Thirumbum Paavikenrum மனந்திரும்பும் பாவிக்கென்றும்
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பா வந்தனமே
திருச்சபை நடுவில் உமது பெயரைச்
சொல்லியே பாடிடுவேன் - திருக்கரம்
செய்திட்ட நன்மை நினைக்கிறேன்
திருச்சபை நடுவில் உமது பெயரைச்
சொல்லியே - உம்முடைய செயல்களெல்லாம்
நினைக்கும் போது வியக்கிறேன்
இரதங்களும் குதிரைகளும் எங்களை
இரட்சிக்க முடியவில்லை - உம்மை
விட்டால் எங்களுக்கு வேறே வழியில்ல
இரதங்களும் குதிரைகளும் எங்களை
இரட்சிக்க முடியவில்லை - உம்மை நம்பி
வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே - என்னை
விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே