ஒருவாராய் சாவாமையுள்ளவரே
Oruvaray Savamaiullavare
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TELUGU
ஒருவாராய் சாவாமையுள்ளவரே
சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே
மனிதரில் ஒருவரும் கண்டிராத தெய்வமே
மனிதரில் ஒருவரும் காணக்கூடா தெய்வமே
துதியும் கனமும் நித்திய வல்லமையும்
உமக்கே உண்டாவதாக
நித்தியமும் அழிவில்லாமையும் உடையவரே
அதரிசனமுள்ள ராஜனாக இருப்பவரே
ஒருவராய் ஞானமுள்ள தேவனாக இருப்பவரே
எல்லாவற்றையும் உயிரோடிருக்க செய்பவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தூயவரே
ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தரே
அனுபவிக்க சகலவித
நன்மைகளை கொடுப்பவரே
அளவிட முடியா அறிவை உடையவரே
மகா பெலமுள்ள தேவனாக இருப்பவரே
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்பவரே
எண்ணி முடியாத அதிசயங்களை செய்பவரே
சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே
மனிதரில் ஒருவரும் கண்டிராத தெய்வமே
மனிதரில் ஒருவரும் காணக்கூடா தெய்வமே
துதியும் கனமும் நித்திய வல்லமையும்
உமக்கே உண்டாவதாக
நித்தியமும் அழிவில்லாமையும் உடையவரே
அதரிசனமுள்ள ராஜனாக இருப்பவரே
ஒருவராய் ஞானமுள்ள தேவனாக இருப்பவரே
எல்லாவற்றையும் உயிரோடிருக்க செய்பவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தூயவரே
ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தரே
அனுபவிக்க சகலவித
நன்மைகளை கொடுப்பவரே
அளவிட முடியா அறிவை உடையவரே
மகா பெலமுள்ள தேவனாக இருப்பவரே
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்பவரே
எண்ணி முடியாத அதிசயங்களை செய்பவரே