• waytochurch.com logo
Song # 15700

தலை சாய்க்கும் கல் நீரய்யா

Thalai saikkum kal


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to BENGALI

தலை சாய்க்கும் கல் நீரய்யா

மூலைக்கல் நீரய்யா



ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்

என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்



மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி

பூமியின் தூளைப்போல் உன் சந்ததி

பெருகும் என்று வாக்குரைத்தீரே

சொன்னதை செய்யுமளவும்

என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு



பூமியின் வம்சங்கள் உனக்குள்

உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்

என்று ஆசீர்வாத வாய்க்காலாக

என்னை மாற்றினீரே

சொன்னதை செய்யுமளவும்

என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு



செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து

என்னை கனப்படுத்துவீர்

தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்

என்னை காப்பாற்றுவீர்

சொன்னதை செய்யுமளவும்

என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com