• waytochurch.com logo
Song # 15735

உன் மனவிருப்பத்தை

Un Mana Virupathai


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to HINDI



உன் மனவிருப்பத்தை அளித்திடுவார் அஞ்சாதே - உன் நேசரே (2)



எரிகோ கோட்டைகள் போல் தடைகள் வந்தாலும்

வனாந்திரம் போன்ற நிலை உனக்கிருந்தாலும்

தடைகளை உடைப்பவர் உனக்கு முன்னே - உன் மன



1) அழைத்தவரோ உண்மையுள்ளவர்

வாக்குப் பண்ணினவர் மாறாதவர் - (2)

ஜெபத்திலே கேட்பது தாமதித்தாலும் - ஆ...ஆ... (2)

நிச்சயமாய் முடிவொன்று உனக்கு உண்டு

நம்பிக்கை வீணாகப் போகாது - எரிகோ



2) அன்னாளின் கண்ணீர் அவர் துடைத்தார்

உன் கண்ணீர் ஜெபத்துக்கும் பதில் கொடுப்பார் - (2)

மீன் கேட்டால், பாம்பை அவர் தருவாரோ - ஆ... ஆ... (2)

பொய் சொல்ல தேவனும் மனுஷனல்ல

வாக்குகள் மாறிட வாய்ப்புமில்ல - எரிகோ


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com