• waytochurch.com logo
Song # 15924

இயேசு போல வாழலாம்

Yesu Pola Vazhalam


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA



இயேசு போல நாமும் கூட வாழலாம்

மறுஇயேசுவாக நாமும்கூட மாறலாம் - (2)

அன்பும் இரக்கமும் இதயத்தில் இருந்தால்

மன்னிப்பை தினமும் பகைவர்க்கு கொடுத்தார் - (2) இயேசு போல



1) பலியை அல்ல இரக்கத்தையே

விரும்பிடும் கடவுள் நம் இயேசுவே - (2)

பாவத்தையே அல்ல பரிவினையே

காட்டிடும் கடவுள் நம் இயேசுவே

பாடுகள் சுமந்து பரிபலன் தந்த

மாபரன் இவர் தானே

இவரைத் தொடர்வோம்

நிதமும் தொடர்வோம் - (2) இயேசு போல



2) உள்ளதை எல்லாம் பகிர்ந்திடவே

உவமைகள் சொன்னார் நம் இயேசுவே

இறங்கிடும் மனமே மேன்மையென

மீட்பினை விதைத்தார் நம் இயேசுவே

பாசத்தின் மிகுதி பாய்ந்திட

உயிரைத் தந்தவர் இவர் தானே

இவரைத் தொடர்வோம்

நிதமும் தொடர்வோம் - (2) இயேசு போல


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com