• waytochurch.com logo
Song # 15927

யெஷுவா யெஷுவா என்ற நாமம்

Yeshua yeshua endra naamam


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to MALAYALAM

யெஷுவா யெஷுவா என்ற நாமம்

உனக்கும் எனக்கும் போதும் போதும்

இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம்

முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும்

அனைவரும் தொழுதிடும்



நீதியின் சூரியனே நீரே நாயகனே

ஏழைகள் காவலனே யெஷுவா யெஷுவா

பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே

உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே



கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே

மூன்றில் ஒன்றானவரே யெஷுவா யெஷுவா

பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன்

பாவங்களை அகற்றிடும் தாயகன் மகிமையிலே முதல்வன்



ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே

ஆத்துமா இரட்சகரே யெஷுவா யெஷுவா

ஒப்புரவை உண்டுபண்ணும் வேலையை துப்புரவாய் முடித்தவரே

முன்குறிக்கப்பட்டவரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com