• waytochurch.com logo
Song # 16182

Nandriudan Thuthipaen


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA

நன்றியுடன் துதிப்பேன் நல்லவரே உம்மையே

நாளெல்லாம் பாடுவேன் என்றுமே - (2)



1. அரணும் கோட்டையுமானீர்

எந்தன் வாழ்க்கையில் நங்கூரமானீர் - (2)

துயர நேரத்தில் என்னை தேற்றிடும் தேற்றரவாளரானீர்

எந்தன் தேற்றரவாளரானீர் - நன்றியுடன்



2. வழியும் வெளிச்சமுமானீர்

எந்தன் வாழ்க்கையில் ஜீவனாயானீர் - (2)

குழியில் இருந்து என்னை மீட்டிட

எந்தன் அன்பின் மீட்பரானீர் - (2) - நன்றியுடன்



3. ஆதியும் அந்தமுமானீர்

எந்தன் வாழ்க்கையில் நிரந்தரமானீர் - (2)

உம்மை என்றுமே துதித்திட

(எந்தன்) துதிக்குப் பாத்திரரானீர் - (2) - நன்றியுடன்



4. மேகஸ்தம்பமானீர் இரவில்

அக்கினிஸ்தம்பமாயானீர் - (2)

நீர் என்னோடு என்றும் இருப்பதால்

(எந்தன்) இம்மானுவேலரானீர் - நன்றியுடன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com