• waytochurch.com logo
Song # 16213

Yesuvin Naamathil


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to MALAYALAM

அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே

காத்திருக்கும் எங்கள் மேல் ஆவி ஊற்றுமே - (2)



இயேசுவின் நாமத்தில் அக்கினி உண்டு

இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு

இயேசுவின் நாமத்தில் எழுப்புதல் உண்டு

இயேசுவின் நாமத்தில் அற்புதம் உண்டு - (2)



1. சிறையின் கதவுகள் திறந்ததே

பேதுருவின் கட்டுகள் உடைந்ததே

திருச்சபை ஜெபத்தின் வல்லமை

அற்புத அதிசயம் நடந்ததே - (2)

நம்முடைய ஜெபத்திலே நடக்கும்

அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கும்

நம்முடைய ஜெபத்திலும் திறக்கும்

அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கும் - இயேசுவின் நாமத்தில்



2. நீரை ரசமாக மாற்றினார்

ஆயிரங்களை அவர் போஷித்தார்

காற்றையும் கடலையும் அதட்டினார்

மரித்த லாசருவை எழுப்பினார்

உங்களுக்கும் அற்புதங்கள் செய்கிறார்

இன்றைக்கு இப்போதே செய்கிறார் - இயேசுவின் நாமத்தில்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com