aar ivar aararo ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ
ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ
ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ
கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ
சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ