manavalvu puvi valvinil valvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
சரணங்கள்
1. துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல — மண
2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல — மண
3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல — மண
4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி – நல்ல — மண