raaja raaja thaeva raajan yaesu ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்
ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன் |
மகாராஜன் தான் | 2
ஏழ்மைக் கோலம் எடுத்து
பாவத்தை போக்க வந்தவர்
பாலகனாய் பிறந்த நாள்
மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய |
விண்ணின் சிந்தைகள் புவி அறிய | 2
அன்பின் நேசம் என்றும் செழிக்க |
யேசு பாலகனாய் பிறந்தார் |
விழி தந்தையைக் கண்டு ஒளிர |
மொழி பரமனின் புகழைப் பாட | 2
வழி வேதத்தில் நிலைத்துத் திகழ |
யேசு பாலகனாய் பிறந்தார் |