thaeva atissuvattil sellavae தேவ அடிச்சுவட்டில் செல்லவே
தேவ அடிச்சுவட்டில் செல்லவே
நான் தீர்மானித்தேன் இன்றே
அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன் |
புது நோக்கம் என் வாழ்வினிலே | 2 – தேவ
இயேசுவின் அன்பினையே நான்
அனுதினம் அனுபவித்தேன்
ஊற்றிடுவேன் என்னை பலியாக |
அவர் அன்புக்கு பதிலாக | 2 – தேவ
உலகத்தை முற்றிலுமாய் தினம்
சிலுவையில் அறைந்திடுவேன்
சிலுவையை எடுத்தே பின் செல்வேன் |
அவர் காட்டும் பாதையிலே | 2 – தேவ
இந்தியர் இயேசுவுக்கே என்ற
நோக்கத்தில் வாழ்ந்திடுவேன்
என் தலைமுறையை இயேசுவுக்கே |
வரவழைப்பேன் சீக்கிரமே | 2 – தேவ