thooya aaviyae thunaiyaga varuveer தூய ஆவியே துணையாக வருவீர்
தூய ஆவியே துணையாக வருவீர்
இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் – 2
மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்
மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் – 2
மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்
மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் – 2
தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்
தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் – 2
பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர்
பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் – 2
கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்
இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் – 2