• waytochurch.com logo
Song # 18537

உனக்கு நிகரானவர் யார் இந்த

Ummaku Nikaravar Yaar


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to KANNADA

ಉಮ್ಮಕು ನಿಕರವರ್ ಯಾರ್
உனக்கு நிகரானவர் யார் இந்த
உலக முழுவதிலுமே
தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு
1. தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ
நேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு
2. கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை
மந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை
கந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவே
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி – உனக்கு

ummaku nikaravar yaar
unakku nikaraanavar yaar intha
ulaka muluvathilumae
thanakku thaanae nikaraam thaathai thiruchchuthanae
manukkulam thannai meetka maanidanaaka vantha -unakku
1. thaay makalukkaaka saavaalo koodap pirantha
thamaiyan thampikkaay maayvaano
naeyan naeyarkkaay saavaano thanathuyirai
naer virothikkaay eevaano
nee im mannnulakil neesarkatkaaka vanthu
kaayum manamadavarkkaaka mariththaay suvaami - unakku
2. kanthai urintherinthanai neethiyin aatai
kanakka uduththuviththanai
manthaiyil serththuvaiththanai kadum vinaikal
maatti enthanaik kaaththanai
kantha malarp paathanae kanakarathna maeruvae
sinthai uvanthu vantha thiyaaka raasanae suvaami - unakku


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com