இரங்குமே என் இயேசுவே
irangumeenyesuve
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to KANNADA
பல்லவி
இரங்குமே ! என் இயேசுவே
இரக்கத்தில் ஐஸ்வரியமே
கூவி கதறியே இரவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே
சரணங்கள்
நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே அன்பின் பிதா முன்னில் இன்று ஜெபித்திடும் அன்பர் ஜெபம் கேளுமே.
உற்றார் பெற்றோரும் குடும்பங்களும்
மற்றும் பலர் மாள்வதைக் கண்டு சகித்திடா தென்றும் ஜெபித்திடும் கண்ணீர் ஜெபம் கேளுமே.
அன்று நினிவே அழிவைக் கண்ட
அன்பே இரங்கினீரே
யோனா உரைத்த தம் ஆலோசனை தந்து ஏழை ஜெபம் கேளுமே.
எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபம் கேளுமே.
சோதனையினின்று இரட்சித்திரே சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர் ஆதி ஜெபம் கேளுமே.
ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக ஐங்காயங்கள் ஏற்றீரே
தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத் தேடும் ஜெபம் கேளுமே.
பிள்ளைகள் அப்பம் கிடைத்திடாதோ பேதைகள் கேட்டிடவே
மேசை துணிக்கைகள் தாரும் எனக் கெஞ்சும் மாந்தர் ஜெபம் கேளுமே.
தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற பக்தர் ஜெபம் கேளுமே.