• waytochurch.com logo
Song # 22278

makanae un negnsenakku thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ


மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே

2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே

3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?

4. உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே

5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே



Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com