manushanaa vaazhaatha ennai மனுஷனா வாழாத என்னை
மனுஷனா வாழாத என்னை
மீட்டிட வந்ததொரு சாமி
பாதகன் போல் பாவம் நீக்க
பாவி போல் தொங்கின சாமி
பரலோகம் கொண்டுச் செல்ல
நரலோகம் வந்தவரே
நாதி இல்லாத என்னை
தேடியே வந்தவரே
ஆதியும் அந்தமும் இல்லா
ஜோதியின் தேவன் நீரே -மனுஷனா
1. வானத்தையும் பூமியையும்
அதில் உள்ள யாவையும் பார்க்கையிலே
நீர் யோசிக்கவும் என்னை நேசிக்கவும்
நான் என்ன செய்தேனோ தெரியலையே
விண்லோக மகராஜனே
தேவனின் புத்திரனே
வீணான என்னை மீட்க
தானாக வந்தவரே – மனுஷனா
2. பரலோகம் போவேனோ
பாழான என் வாழ்வை பார்க்கையிலே
இழிவான வாழ்க்கையினை
இனிமாற்ற வழியில்ல என்றிருந்தேன்
குருசினில் தொங்கி என்னை
குணமாக்கி விட்டவரே
ஈனச் சிலுவையினால்
இரட்சிப்ப அளித்தவரே – மனுஷனா