thaeva paalan pirantheerae தேவ பாலன் பிறந்தீரே
தேவ பாலன் பிறந்தீரே
மனுக்கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீர் இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே
1. மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவனே
வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
தூயா உம் நாமத்தையே
2. பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே
பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
தூயா உம் நாமத்தையே