• waytochurch.com logo
Song # 27065

பலமளித் தெம்மை புது வழிகளில் நடத்திடும் தாரகம் நீரல்லவோ


இருவரொருமித்து என் நாமத்திலே கூடும் வேளை

சமூக மளிப்பேனென்றீரே

உம் அருள் வாக்கு போல அளித்தீரே உம் சமூகம்

உம்மை துதித்து மகிழ்வேன் - பல
அதிசயமானவர் என்பது மறு பெயர்

அதிசயம் விளங்கச் செய்யுமே

இது சமயமூமது இதயம் விரும்புவதை

இறையே விளங்கச் செய்வீரே - பல
பாவிகள் உம்மண்டை பாவ உணர்வடைந்து

தாகமுடனடைத்திட

நாவினறிக்கையினால் நவீன இதயம் பெற்று

நசரேயனை பின் சென்றிட - பல
கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை

பலமாயுரைக்க வேணுமே

நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து

அலகை அடைக்க வேணுமே - பல
வழி நடத்திட எம்மை வல்லமை யுள்ளவரே

ஒளியாக முன் நடவுமே

விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது

களித்திட எம்மைக் காருமே - பல

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com