• waytochurch.com logo
Song # 28230

தடுமாறும் நேரங்களில்

Thadumarum Nerangalil


Show Original TAMIL Lyrics

Translated from TAMIL to MALAYALAM

തഡുമരുമ് നെരങലില്
தடுமாறும் நேரங்களில்
தாங்கியே நடத்திடுவார்
தள்ளாடும் நேரத்திலும்
தயவோடு நடத்திச்செல்வார்
இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்
இயேசு பெரியவர், இயேசு மேலானவர்


1. சோதனைகள் வந்தாலும்,
வேதனைகள் வந்தாலும்
சாத்தானின் கூட்டம்
என்னை சூழ்ந்திட்டாலும்
எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டு
எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்
(இயேசு நல்லவர் …)


2. கோரப்புயல் வீசினாலும்
படகினைக் கவிழ்த்தாலும்
ஆழியிலே ஜலம் பொங்கினாலும்
அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடு
அடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்
(இயேசு நல்லவர் …)


3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடு
கலக்கமுமில்லை பயமில்லையே
(இயேசு நல்லவர் …)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com